ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு எம்எல்ஏ-க்களுக்கு சென்னையில் 2 கிரவுண்ட் இடம் தருவதாக சொன்னது யார்? செங்கோட்டையன் கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர் பெங்களூர் அறிவியல் கல்வி மைய மாணவர் தற்கொலை! 15 நாள்களில் 2வது சம்பவம்

ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத்

ராகுல் காந்தியைக் கண்டு பாஜக அஞ்சுவதாக சஞ்சய் ரௌத் தெரிவித்திருப்பது பற்றி...

BJP is scared of Rahul Gandhi, says Sanjay Raut

சஞ்சய் ரௌத்

Published On :22 ஆகஸ்ட் 2026, 9:21 pm IST

ராகுல் காந்தியின் மாணவர்கள் குரல் நிகழ்ச்சிக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்ததன் மூலம் அவரைக் கண்டு பாஜக அஞ்சுவதாக சிவசேனை (உத்தவ்) மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவர் செய்தியளார்களுக்கு அளித்த பேட்டியில், ஜந்தர் மந்தரில் சாஹில் லோச்சவ் காயமடைந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வலியுறுத்தி, ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் ஆறு மணி நேர தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

காவல்துறை அவரது கோரிக்கையை ஏற்ற பிறகே அவர் போராட்டத்தைக் கைவிட்டார். இதன்மூலம் ராகுல் காந்தியின் கோரிக்கையை பாஜக தலைமையிலான மத்திய அரசு பணிந்து ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

சனிக்கிழமை மாலை புணேவில் நடைபெறவுள்ள ராகுல் காந்தியின் மாணவர்கள் குரல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க அரசு 30 நிபந்தனைகளை விதித்துள்ளது குறித்துப் பேசிய அவர், "ராகுல் காந்தி வேறு நாட்டிலிருந்தா வந்துள்ளார்?

ஆளும் கட்சித் தலைவர்கள் இதுபோன்ற நிபந்தனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பினார். பாஜக அஞ்சியதே இதற்கு காரணம். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு, பாஜகவின் வீழ்ச்சி தொடங்கும். அவர்கள் ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்று கூறினார்.

Summary

Shiv Sena (UBT) leader Sanjay Raut on Saturday claimed that the BJP was "rattled" and hence the administration imposed numerous conditions before giving permission to Congress leader Rahul Gandhi's 'Chhatron Ki Goonj' programme in Pune.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.