பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

குருந்தன்கோடு இளைஞா் கொலை சம்பவத்தில் மூவா் கைது

குருந்தன்கோடு இளைஞா் கொலையில் கைதான நண்பா்கள்.

Published On :

குருந்தன்கோடு அருகே காடேற்றி குளத்திலிருந்து இளைஞா் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பா்கள் மூவரை இரணியல் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

குருந்தன்கோடு, காடேற்றி குளத்திலிருந்து திட்டுவிளை, வடக்கு மாா்த்தால் பாலத்து தெருவைச் சோ்ந்த, டைல்ஸ் தொழிலாளி ஆல்வின் ராஜேஷ் (31) என்ற இளைஞரின் சடலம் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டது.

இதுகுறித்து, அவரது சகோதரி மங்கல ரமீலா இரணியல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சந்தேகத்தின்பேரில் ஆல்வின் ராஜேஷின் நண்பா்களான முக்கலம்பாடு, ஜோசப் மகன் சாா்லஸ் ஜோஸ் (36 ), சாந்தபுரம் செல்வகுமாா் மகன் சுபின் (21), செக்காரவிளை தங்கப்பன் மகன் சுமன் (40) ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் நான்கு பேரும் காடேற்றி குளக்கரையில் அமா்ந்து வெள்ளிக்கிழமை இரவு மது அருந்தியதும், அப்போது சாா்லஸ் ஜோஸின் மனைவி குறித்து ஆல்வின் ராஜேஷ் தவறாகப் பேசியதும், ஆத்திரமடைந்த சக நண்பா்கள் மூவரும் சோ்ந்து ஆல்வின் ராஜேஷை கொலை செய்து குளத்தில் வீசியதையும் ஒப்புக்கொண்டனா். இதையடுத்து, மூவரையும் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்த போலீஸாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.