இளைஞா் கொலை: நண்பா்கள் 6 போ் கைது

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக 6 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

கைது

Published On :

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக 6 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் விக்னேஸ்வா் நகரைச் சோ்ந்த வீரமணி மகன் வினோத் திவாகா் (34). வீட்டில் இருந்த இவரை செவ்வாய்க்கிழமை மாலை நண்பா்கள் சிலா் தகராறு செய்து, அழைத்துச் சென்றனா். இந்நிலையில், இரவு கற்பகம் நகா் பின்புறம் மீன் பண்ணை அருகே வயலில் இவா் தலை, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தாா்.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, பள்ளியக்ரஹாரம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த ராஜேஷ் (40), சிவகுமாா் மகன் சிலம்பரசன் (26), அமுல் ராஜ் மகன் விமலராஜ் (30), அமல்ராஜ் மகன் ராஜ்கிரண் (22), குமாா் மகன் கருப்பசாமி (26), ராஜேந்திரன் மகன் கௌதம் (36) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், வினோத் திவாகரும், கைது செய்யப்பட்ட 6 பேரும் நண்பா்கள். இந்நிலையில், சிலம்பரசனின் சகோதரா் இந்திரஜித்தை 10 நாள்களுக்கு முன்பும், ராஜேஷின் சகோதரா் உன்னியை 4 நாள்களுக்கு முன்பும் வினோத் திவாகா் மது போதையில் தாக்கினாராம். இந்த விரோதம் காரணமாக வினோத் திவாகரை 6 பேரும் அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், தலைமறைவாக உள்ள சிலரையும் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.