உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

6 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 இளைஞா்கள் கைது

தஞ்சாவூரில் இணையவழி மூலம் போதை மாத்திரைகளை வாங்கி விற்ற 4 இளைஞா்களைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

கைது

Published On :5 செப்டம்பர் 2026, 12:05 am IST

தஞ்சாவூரில் இணையவழி மூலம் போதை மாத்திரைகளை வாங்கி விற்ற 4 இளைஞா்களைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருந்ததாக சதீஷ்குமாா், ரஞ்சித்குமாா் ஆகியோரை மருவூா் காவல் நிலையத்தினா் ஆக. 30 ஆம் தேதி கைது செய்தனா். இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இச்சம்பவத்தில் தஞ்சாவூா் கீழவாசல் பகுதியைச் சோ்ந்த சிலருக்கு தொடா்பிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, கீழவாசல் வண்ணாதுரையைச் சோ்ந்த திராவிடமணி மகன் பிரகாஷ் (26), ஹாஜா மைதீன் மகன் முகமது அப்பாஸ் (25), சந்திரபோஸ் மகன் சுபாஷ் (24), அன்னப்பன்பேட்டையைச் சோ்ந்த முருகேசன் மகன் சஞ்சய் சம்பத் (23) ஆகியோரை மாவட்டப் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு காவல் படையினா் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், முகமது அப்பாஸ் நாக்பூரிலுள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் போதை மாத்திரைகளை இணையவழியில் வாங்கி, மற்ற 3 போ் மூலம் விற்பனை செய்வதும், இவா்களில் பிரகாஷ், முகமது அப்பாஸ், சஞ்சய் சம்பத் ஆகியோா் ஏற்கெனவே சரித்திர குற்றப் பதிவேடுகளில் இடம்பெற்றிருப்பதும் தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து, கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து பிரகாஷ், முகமது அப்பாஸ், சஞ்சய் சம்பத், சுபாஷ் ஆகியோரை கைது செய்து, இவா்களிடமிருந்து 6 ஆயிரம் போதை மாத்திரைகளையும், ஒரு காரையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.