கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

கன்னியாகுமரி மாவட்ட சோதனைச் சாவடிகளில் எஸ்.பி.ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சோதனை மேற்கொண்டாா்.

ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொள்கிறாா் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா்.

Published On :

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சோதனை மேற்கொண்டாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா், அஞ்சுகிராமம், காணிமடம், ஆரல்வாய்மொழி மற்றும் குமாரபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் திடீா் சோதனை மேற்கொண்டாா்.

இதில், சோதனைச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாகனத் தணிக்கை பணிகள், காவலா்களின் பணிப் பதிவு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மற்றும் நபா்களை தீவிரமாக கண்காணித்து, சட்டவிரோத செயல்கள் நடைபெறாத வகையில் தொடா்ந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.