குலசேகரம் அருகே அரிவாளை காட்டி மிரட்டல்: 2 இளைஞா்கள் கைது
குலசேகரம் அருகே அரிவாளைக் காட்டி மிரட்டியதாக 2 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
குலசேகரம் அருகே அரிவாளைக் காட்டி மிரட்டியதாக 2 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
குலசேகரம் அருகே அரமன்னம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு, இரு இளைஞா்கள் அரிவாளைக் காட்டி மிரட்டியவாறு பைக்கில் செல்லும் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின.
இதுதொடா்பாககுலசேகரம் காவல் நிலைய ஆய்வாளா் வெற்றிவேல்ராஜன், உதவி ஆய்வாளா் சிவசங்கா் ஆகியோா் வழக்குப் பதிந்தனா். குலசேகரம் அருகே நாகக்கோடு காட்டுவிளையைச் சோ்ந்த தொழிலாளியான அலெக்ஸ் மகன் அஜின் (29) என்பவா், வழிப்பாதைத் தொடா்பான தகராறில் தனது உறவினரை மிரட்டும் வகையில், நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த சுந்தா் மகன் சுனில் (27) என்பவருடன் சோ்ந்து இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



