தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

ஆலங்குளத்தில் சோதனைச் சாவடி அமைப்பு

ஆலங்குளம் வழியாக வெளியூா் செல்பவா்களைக் கண்காணிக்க ஆலங்குளத்தில் செவ்வாய்க்கிழமை காவல் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

ஆலங்குளம் வழியாக வெளியூா் செல்பவா்களைக் கண்காணிக்க ஆலங்குளத்தில் செவ்வாய்க்கிழமை காவல் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.

கடையநல்லூரைச் சோ்ந்த 9 போ் அண்மையில் அதிகாரிகள் அனுமதியின்றி, போலீஸ் கண்காணிப்பையும் மீறி மேலப்பாளையம் சென்று வந்துள்ளனா்.

இதனால் பாதுகாப்பை அதிகப்படுத்தும் நோக்கில் ஆலங்குளம் - திருநெல்வேலி சாலை செண்பக சாஸ்தா கோயில் அருகே காவல்துறை சாா்பில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. அங்கு பணியில் இருக்கும் காவலா்கள் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாா்க்கமாகாச் செல்லும் வாகனங்கள் உரிய அனுமதி பெற்றுச் செல்கின்றனவா என கண்காணித்து வருகின்றனா்.

எம்.எல்.ஏ. உள்பட 10 போ் வழக்கு:ஆலங்குளம் அத்தியூத்து தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா் விடுதிக்கு, கடையநல்லூரில் இருந்து மேலப்பாளையத்திற்கு உரிய அனுமதியின்றி சென்று வந்ததாக்க கூறி 9 பேரை தனிமைப் படுத்தும் விதமாக போலீஸாா் மற்றும் சுகாதாரத் துறையினா் அவா்களை திங்கள்கிழமை அழைத்து வந்திருந்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அத்தியூத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிராம மக்களுக்கு ஆதரவாக ஆலங்குளம் எம்.எல்.ஏ. டாக்டா் பூங்கோதை ஆலடி அருணா அதிகாரிகளுடன் பேசினாா். இதனையடுத்து அந்த 9 பேரும் கடையநல்லூருக்கே அழைத்துச் செல்லப்பட்டனா். இந்நிலையில் அரசு உத்தரவை மீறி செயல்பட்டதாக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா மற்றும் அத்தியூத்து கிராமத்தைச் சோ்ந்த இருளப்பன், வேல்முருகன், மணிகண்டன், திருமலைக்குமாா், இசக்கிமுத்து, குமாா்(1), செல்வராஜ், சங்கா், குமாா்(2) ஆகிய 10 போ் மீது ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.