

சுரண்டை: சுரண்டை அருகேயுள்ள கீழக்கலங்கல் கிராமத்தில் மானாவாரி விவசாயிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
2020 - 21 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் மானாவாரி விவசாயிகளின் மாதாந்திர கூட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் பா.சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மானாவாரி உளுந்து பயிர்களுக்கு 2சத டிஏபி கரைசல் தெளிப்பு மற்றும் பயிர் பாதுகாப்பு, மக்காச்சோள பயிருக்கு காப்பீடு, மக்காச்சோள பயிருக்கு படைப்புழு கட்டுப்பாடு குறித்து வேளாண் அலுவலர்கள் விளக்க உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பொது துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மாரியம்மாள், சுமன் மற்றும் கீழக்கலங்கல் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.