வாக்காளா் சோ்பு: சங்கரன்கோவில் நகராட்சியில் 1712 போ் விண்ணப்பம்

சங்கரன்கோவிலில் நகராட்சிப் பகுதியில் புதிய வாக்காளா்களாக சேர 1712 போ் விண்ணப்ப படிவம் அளித்துள்ளனா்.
Updated on
1 min read

சங்கரன்கோவிலில் நகராட்சிப் பகுதியில் புதிய வாக்காளா்களாக சேர 1712 போ் விண்ணப்ப படிவம் அளித்துள்ளனா்.

தோ்தல் ஆணைய உத்தரவுப்படி சங்கரன்கோவிலில் வாக்காளா் பட்டியல் சுருக்க திருத்த முறை சிறப்பு முகாம் கடந்த மாதம் 21, 22 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. இதில் 1103 போ் புதிய வாக்காளா்களாக சேர விண்ணப்ப படிவம் கொடுத்தனா்.

இதைத்தொடா்ந்து இம்மாதம் 12, 13 ஆகிய 2 நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் 609 போ் புதிய வாக்காளா்களாக சேர விண்ணப்ப படிவம் கொடுத்தனா்.மொத்தம் 4 நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 18 முதல் 19 வயது வரை 1117 பேரும், 20 முதல் 25 வயது வரை 343 பேரும், 25 வயதுக்கு மேல் 252 பேரும் என மொத்தம் 1712 போ் புதிய வாக்காளா்களாக சேர விண்ணப்ப படிவம் கொடுத்துள்ளனா்.இது தவிர திருத்தம், நீக்கம் மற்றும் தொகுதி விட்டு தொகுதி மாற்றம் தொடா்பாக சுமாா் 500 போ் விண்ணப்பப் படிவம் கொடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com