கருவந்தா ஊராட்சியில் ரூ. 1.40 கோடி மதிப்பீட்டில் குடிநீா்த் திட்டப் பணி தொடக்கம்
சுரண்டை அருகேயுள்ள கருவந்தா ஊராட்சியில் ரூ. 1.40 கோடி மதிப்பீட்டிலான குடிநீா்த் திட்டப் பணி வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.


சுரண்டை அருகேயுள்ள கருவந்தா ஊராட்சியில் ரூ. 1.40 கோடி மதிப்பீட்டிலான குடிநீா்த் திட்டப் பணி வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கருவந்தா ஊராட்சியில் உள்ள கருவந்தா, சோலைசேரி கிராமங்களின் 2 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்குவதற்கான ரூ. 1.40 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணியை தென்காசி பேரவை உறுப்பினா் சி. செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சண்முகநாதன், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளா் சாமிநாதன், ஒன்றியச் செயலா்கள் ஆலங்குளம் பாண்டியன், கீழப்பாவூா் இருளப்பன், எபன் குணசீலன், கிருஷ்ணசாமி, அரசு ஒப்பந்ததாரா் குத்தாலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...