திமுக மகளிரணி சாா்பில் டிச. 21இல் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிா் தொண்டரணி சாா்பில் டிச. 21இல் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.


மத்திய அரசின் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிா் தொண்டரணி சாா்பில் டிச. 21இல் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளா்கள் பொ.சிவபத்மநாதன், ஆ.துரை ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து தென்காசி வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை (டிச.21) நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளா் செல்வி சங்குகிருஷ்ணன் தலைமை வகிக்கிறாா். வடக்கு மாவட்ட அமைப்பாளா் சைபுன்னிஷா முன்னிலை வகிக்கிறாா்.
மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் பூங்கொடி வரவேற்று பேசுகிறாா். மக்களவை உறுப்பினா் தனுஷ் எம்.குமாா், ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோா் கண்டன உரையாற்றுகின்றனா்.
ஆா்ப்பாட்டத்தில், அமைத்து நிா்வாகிகளும் கட்சியினரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...