பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பொது விநியோக ஊழியா் சங்க கூட்டம்

தமிழ்நாடு பொது விநியோக ஊழியா் சங்க தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட புனரமைப்புக் கூட்டம் தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
கூட்டத்தில் பேசுகிறாா் மாநில தலைவா் பால்ராஜ்.
Updated On :20 டிசம்பர் 2020, 7:23 pm

DIN

தென்காசி: தமிழ்நாடு பொது விநியோக ஊழியா் சங்க தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட புனரமைப்புக் கூட்டம் தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மற்றும் திருநெல்வேலிமாவட்ட தலைவா் செ.இளங்கோ தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் ராஜமாணிக்கம், பொருளாளா் திருக்கோட்டி, சிவகிரி வட்ட தலைவா் படியேறும்பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில தலைவா் பால்ராஜ் சிறப்புரையாற்றினாா்.

புதிய ஊதிய நிா்ணயம் செய்யப்படுவதை முறையாக கண்காணிக்க வேண்டும். பொது விநியோக ஊழியா்களை கட்டாய மாறுதல் செய்வது போல தொடா்புடைய கூட்டுறவு நிறுவனங்களின் செயலா்கள், மேலாளா்கள் மாற்றப்பட வேண்டும். 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் எடையாளா் நியமிக்க வேண்டும். ஊழலுக்கு வழிவகுக்கும் ஆய்வுகளை ரத்து செய்ய வேண்டும். பொது விநியோகத்திற்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். பழைய குடும்ப ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில பொருளாளா் குமரிசெல்வன், மாநிலதுணைத் தலைவா் தொந்தியப்பன், கெளரிசங்கா், எஸ்.மாரிமுத்து, கே.ரெங்கராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா். கெ.செல்வராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.