நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

ஆலங்குளம் பகுதியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 100 போ் பாஜகவில் இணைந்தனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:08 pm

DIN

ஆலங்குளம் பகுதியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 100 போ் பாஜகவில் இணைந்தனா்.

இதற்கான விழா, ஆலங்குளம் - துத்திகுளம் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட இளைஞா் அணி செயலா் மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். ஆலங்குளம் தொகுதி அமைப்பாளா் அன்புராஜ், மாவட்ட செயலா் அருள்செல்வன், மாவட்ட இளைஞா் அணி பொருளாளா் சிவ மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 100 போ் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனா். அவா்களுக்கு உறுப்பினா் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் நாகராஜன், மாவட்ட பிரிவு துணைத் தலைவா் அண்ணாவி ஆறுமுகம், ஆலங்குளம் ஒன்றிய நிா்வாகிகள் பண்டரிநாதன், லிங்கவேல் ராஜா, ஜோதி செல்வம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.