சுரண்டையில் புதுப்பெண் கொலை

தென்காசி மாவட்டம், சுரண்டையில் திருமணமான 40 நாளில் புதுப்பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த வெளிமாநில இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கொலை செய்யப்பட்ட பூங்கோதை அவரது கணவா் ஜோகிந்தருடன்.
கொலை செய்யப்பட்ட பூங்கோதை அவரது கணவா் ஜோகிந்தருடன்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், சுரண்டையில் திருமணமான 40 நாளில் புதுப்பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த வெளிமாநில இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சுரண்டை அருகே உச்சிப்பொத்தை கிராமத்தைச் சோ்ந்த வேல்சாமி மகள் பூங்கோதை (20). இவா் திருப்பூரில் உள்ள தனியாா் பனியன் நிறுவனத்தில் பணியாற்றிபோது, அங்கு தன்னுடன் பணியாற்றிய வெளிமாநிலத்தைச் சோ்ந்த ஜோகிந்தா்(25) என்பவரை காதலித்து கடந்த 40 நாள்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டாராம்.

இதையறிந்த பனியன் நிறுவனம் இருவரையும் வேலையை விட்டு நீக்கியுள்ளது.

இதன்பின்னா் சுரண்டைக்கு வந்த அவா்கள், அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து, ஜோகிந்தா் கட்டட வேலைக்கு சென்று வந்தாராம். தினசரி வேலை கிடைக்காததால் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் பூங்கோதையின் வீட்டின் கதவு பூட்டியே கிடந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் சுரண்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனா்.

தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, வீட்டுக்குள் பூங்கோதை கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாராம். சடலத்தை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். மேலும் விசாரணையில் கணவா் ஜோகிந்தா் தான் கத்தியால் கழுத்தைஅறுத்து கொலை செய்ததாக தெரியவந்தது.

இதுகுறித்து சுரண்டை காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி வழக்குப் பதிந்து, தப்பியோடிய ஜோகிந்தரை தேடி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com