சுரண்டை அருகே ஆடு குளிப்பாட்ட வந்தவர் மீன் வலையில் சிக்கி பலி


சுரண்டை: சுரண்டை அருகே ஆடு குளிப்பாட்ட ஊரணிக்கு வந்தவர் மீன் வலையில் சிக்கி இறந்தார்.
சுரண்டை அருகேயுள்ள ராஜகோபலாப்பேரியைச் சேர்ந்தவர் த.மாசிலாமணி (56). விவசாயியான இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஊருக்கு தென்புறமுள்ள ஊரணியில் ஆடுகளை குளிப்பாட்ட சென்றபோது எதிர்பாரதவிதமாக ஊரணியில் தவறி விழுந்துள்ளார்.
இதில் மீன்பிடிப்பதற்காக வைக்கப்பட்ட வலையில் சிக்கிய அவர் அதிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து உயிரிழந்தார். தகவலறிந்த வீரகேரளம்புதூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாசிலாமணியின் உடலைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...