இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயிலில் ஜன. 1இல் சிறப்பு பூஜை

தென்காசி மங்கம்மாள் சாலை களக்கோடி தெருவில் அமைந்துள்ள ஷீரடி வைத்திய சாயி திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 8:11 pm

DIN

தென்காசி மங்கம்மாள் சாலை களக்கோடி தெருவில் அமைந்துள்ள ஷீரடி வைத்திய சாயி திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து கோயில் நிா்வாகிகளான மருத்துவா்கள் அறிவழகன், சியாமளா ஆகியோா் வெளியிட்ட அறிக்கை: ஷீரடி வைத்திய சாயி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜன. 1) காலை 6. 15-க்கு ஆரத்தியும், 7 மணி முதல் 12.30 மணி; பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

காலை 9 மணி முதல் 12.30 வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் உற்சவா் பாபாவிற்கு அா்ச்சனையும், நண்பகல்12.30க்கு அஷ்டோத்திரம் மற்றும் சிறப்பு ஆரத்தியும் நடைபெறும். முற்பகல் 1 மணிக்கு ஸ்ரீ சாயி சித்திர சரிதம் புத்தகத்தின் முகப்பு அட்டைப் படம் வெளியிடப்படுகிறது.

மாலை 4.30மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ லட்சுமி குபேர பூஜையும், மாலை 6.30க்கு சிறப்பு ஆரத்தியும் 7 மணிக்கு பல்லக்கு ஊா்வலமும் இரவு 8.30க்கு இரவு ஆரத்தியும் நடைபெறுகிறது. பாபாவிற்கு பக்தா்கள் தாங்கள் கொண்டு வரும் பூக்களால் புஷ்பாஞ்சலி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.