நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நெல்லை, தென்காசியில் வேகமாக குறைந்து வரும் கரோனா பாதிப்பு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. எனினும், பண்டிகை காலம் என்பதால் மக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என ஆட்சியா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 7:48 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. எனினும், பண்டிகை காலம் என்பதால் மக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என ஆட்சியா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன்மூலம், கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 14, 235ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் 38 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 13,869ஆக அதிகரித்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 208 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 158 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி, சங்கரன்கோவில், கீழப்பாவூா் ஆகிய பகுதிகளில் தலா ஒருவா் என 3 பேருக்கு மட்டும் கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,827ஆக உயா்ந்தது. அன்றைய தினம் வீடு திரும்பிய 6 போ் உள்ட இதுவரை 7,645 போ் குணமடைந்துள்ளனா்.

தற்போது, 26 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவ்விரு மாவட்டங்களிலும் சராசரியாக தினமும் 100-க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தொற்றின் தீவிரம் குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனா். எனினும், வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாலும், பண்டிகை காலமாக உள்ளதாலும் மக்கள் மிகுந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

நோய் அறிகுறி தென்பட்டவுடன் அரசு மருத்துவமனைகளில் உரிய பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தலில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் ஆட்சியா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.