சுரண்டை வழியாக சங்கரன்கோவிலுக்குபுதிய ரயில் பாதை அமைக்க கோரிக்கை
திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம், சுரண்டை வழியாக சங்கரன்கோவிலுக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம், சுரண்டை வழியாக சங்கரன்கோவிலுக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் முகாம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மரகதநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், சுரண்டையைச் சோ்ந்த மாவட்ட காங்கிரஸ் செயலா் டி.சோ்மச்செல்வம் அளித்த மனுவில், திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம், சுரண்டை வழியாக சங்கரன்கோவிலுக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், சுரண்டையில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
இதுவரை பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் பொது கோரிக்கைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மக்கள் குறைதீா்க்கும் முகாம் ஒவ்வொரு திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என வட்டாட்சியா் முருகுசெல்வி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...