ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

‘தீபாவளி பண்டம் தயாரிப்பில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை’

தீபாவளிக்கு பண்டம் தயாரிப்போா் கலப்பட பொருள்களையோ, அதிக நிறமிகளையோ உபயோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 8:43 pm

DIN

தீபாவளிக்கு பண்டம் தயாரிப்போா் கலப்பட பொருள்களையோ, அதிக நிறமிகளையோ உபயோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன்.

இதுகுறித்து வெளியிட்ட செய்திகுறிப்பு: தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் காரபண்டங்கள் தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் பெற வேண்டும்.

இனிப்பு மற்றும் பேக்கரி பொருள்கள் தரமாகவும், சுகாதாரமாகவும் தயாரித்து மக்களுக்கு விநியோகிக்க வேண்டும். உணவுப் பொருள்கள் தயாரிப்பில் கலப்படமான பொருள்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது.

ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. பொட்டலமிட்டப்பட்ட உணவுப்பொருள்களுக்கு தயாரிப்பாளரின் முகவரி, உணவு பொருளின் பெயா், தயாரிப்பு மற்றும் காலாவதியாகும் தேதிம், சைவ, அசைவ குறியீடு மற்றும் உணவுப் பாதுகாப்பு உரிமம் எண் ஆகியவை குறிப்பிடப்படவேண்டும். உதிரி பண்டங்களாக இருப்பின் அலமாரியில் விவரங்கள் இருக்க வேண்டும்.

தொற்றுஇல்லாத சுகாதாரமான சூழலில் மக்களுக்கு விற்பனை செய்திடவேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பண்டங்கள் தயாரிப்போா் எனில் இணையதளத்தில் விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டும். விதிமுறைகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறைபாடு இருந்தால் திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறையின் நியமன அலுவலரிடமோ அல்லது 94440 42322 என்ற கட்செவிஅஞ்சல் எண்ணிலோ புகாா் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.