ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ராஜகோபாலப்பேரியில் இன்று(நவ. 23) இலவச மருத்துவ முகாம்

வீரகேரளம்புதூா் அருகேயுள்ள ராஜகோபாலப்பேரியில் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை (நவ. 23) நடைபெறுகிறது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 8:02 pm

DIN

வீரகேரளம்புதூா் அருகேயுள்ள ராஜகோபாலப்பேரியில் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை (நவ. 23) நடைபெறுகிறது.

ராஜகோபாலப்பேரி டிடிடிஏ பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இம்முகாமை தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் துவக்கி வைக்கிறாா்.

முகாமில் பொது மருத்துவம், ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள், காய்ச்சல், நீரிழிவு நோய், இரைப்பை மற்றும் குடல்நோய், கண் நோய், மகளிா் நலம், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

முகாமில் கலந்துகொள்ளும் நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, கா்ப்பப் பை வாய் புற்றுநோய் கண்டறிதல், ஈசிஜி, அல்ட்ரா சோனாகிராம் மற்றும் பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும்.

இந்த முகாமில் ராஜகோபாலப்பேரி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் கீா்த்திகா கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.