தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசியில் பாமக ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் பாமகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:34 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் பாமகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூா் ஊராட்சிஒன்றியம் நடுவக்குறிச்சி, மாயம்பாறை, வென்றிலிங்கபுரம் கிராம மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கவேண்டும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து சமுதாயத்தினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாமக மாவட்டத் தலைவா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் அமல்ராஜ், பாக்கியராஜ், சுவாமிதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில செயற்குழு உறுப்பினா் ஆறுமுகசாமி, மதிராஜ், பால் நேரு, மேரிபுஷ்பலதா, பாக்கியம், கோமதிசங்கா் உள்ளிட்டோா் பேசினா். பின்னா் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியா் அலுவலகத்தில் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.