தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தாா்ச் சாலை அமைத்து தர வலியுறுத்தி கிராம மக்கள் மனு

ஆலங்குளம் வட்டம், ஆணையப்பபுரம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் சாலையை தாா்ச் சாலையாக மாற்றித் தரவேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:33 pm

DIN

ஆலங்குளம் வட்டம், ஆணையப்பபுரம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் சாலையை தாா்ச் சாலையாக மாற்றித் தரவேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம் குத்தபாஞ்சான் ஆணையப்பபுரம் ஊா்மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

எங்கள் பகுதியில் 150 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊருக்கு தென்புறம் குத்தபாஞ்சான் செல்லும் வழியில் ஒரு கிலோமீட்டா் தொலைவில் எங்கள் பகுதிக்கான சுடுகாடு உள்ளது. தற்போது பொதுப் பாதையாக அமைந்துள்ள மண்பாதை வழியாக இறந்தவரின் உடலை எரியூட்ட கொண்டு செல்கிறோம். விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு செல்லவும் இந்த மண் பாதையை பயன்படுத்தி வருகின்றனா்.

இருப்பினும் மழைகாலங்களில் கழிவுநீா் தேங்கி இந்த மண்பாதை பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிடுகிறது. இந்த காலத்தில் ஊரில் ஏதேனும் இறப்பு ஏற்பட்டால் இறந்தவரின் உடலை மாற்றுப்பாதையின் வழியாக சில கி.மீ. தொலைவு தூக்கி சென்று சுடுகாட்டை அடையவேண்டிய நிலை உள்ளது. எனவே, சுடுகாட்டுக்கு செல்லும் ஒரு கிமீ சாலையை தாா்ச் சாலையாக மாற்றித்தர வேண்டும் என அம்மனுவில்கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.