நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாளையங்கோட்டை அருகே இளைஞர் கொலை: 4 பேர் கைது

பாளையங்கோட்டை அருகே இளைஞர் கொலை தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image

கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார்.

Updated On :1 அக்டோபர் 2020, 8:42 am

DIN

பாளையங்கோட்டை அருகே இளைஞர் கொலை தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் விநாயகம் என்பவரின் மகன் சதீஷ்குமார் (25). இவர் பாளையங்கோட்டை அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்லாரி கிளீனராக வேலை செய்து வந்தார். இவரும், இவருடன் வேலை செய்த தூத்துக்குடி மாவட்டம் நாணல்காடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார், மற்றும் நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுடலை உள்பட 5 பேர் பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சி காட்டுப்பகுதியில் புதன்கிழமை ஒன்றாக மது அருந்தினராம். 

அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதில் ஏற்பட்ட மோதலில் சதீஷ்குமார் உயிரிழந்தார். இதையடுத்து முத்துக்குமார் உள்ளிட்ட 4 பேர் தப்பிச் சென்றனர். இந்நிலையில் நடுவக்குறிச்சி காட்டுப் பகுதியில் இளைஞர் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் நாங்குநேரியில் டிஎஸ்பி அலுவலகத்தில் முத்துக்குமார் உள்பட 4 பேரும் வியாழக்கிழமை சரணடைந்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து திருநெல்வேலி தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.