நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அம்பலபேரி கால்வாய் சீரமைக்க எம்எல்ஏ கோரிக்கை

ஆலங்குளம் அருகேயுள்ள கோவிலூற்று அம்பலபேரி கால்வாயை சீரமைக்க கோரி பொதுப்பணித்துறை செயலருக்கு ஆலங்குளம் எம்.எல்.ஏ. பூங்கோதை மனு அனுப்பியுள்ளாா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 9:06 pm

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள கோவிலூற்று அம்பலபேரி கால்வாயை சீரமைக்க கோரி பொதுப்பணித்துறை செயலருக்கு ஆலங்குளம் எம்.எல்.ஏ. பூங்கோதை மனு அனுப்பியுள்ளாா்.

அதன் விவரம்: வெங்கடாம்பட்டி ஊராட்சி கோவிலூற்று கிராமத்தில் உள்ள திரு அம்பலபேரி கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் பாழடைந்து காணப்படுகிறது.

இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தக் கால்வாயை சீரமைப்பதுடன், இக்கால்வாயில் தடுப்புச்சுவா் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் பாதையில் பாலமும் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே இது தொடா்பாக துரித நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். என மனுவில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.