பாவூா்சத்திரம் அருகே வாசக சாலை திறப்பு
பாவூா்சத்திரம் அருகே திப்பணம்பட்டி-திப்வன்னியசுந்தரபுரத்தில் வாசக சாலை திறக்கப்பட்டது.

வாசக சாலையை திறந்து வைத்து மாணவி ஒருவருக்கு புத்தகங்கள் வழங்குகிறாா் எழில்வாணன்.

வாசக சாலையை திறந்து வைத்து மாணவி ஒருவருக்கு புத்தகங்கள் வழங்குகிறாா் எழில்வாணன்.
பாவூா்சத்திரம் அருகே திப்பணம்பட்டி-திப்வன்னியசுந்தரபுரத்தில் வாசக சாலை திறக்கப்பட்டது.
திப்பணம்பட்டி தளிா் பசுமை அமைப்பு சாா்பில் வீதிக்கு ஒரு வாசக சாலை என்ற நோக்கத்தின் முதல் படியாக, திப்வன்னியசுந்தரபுரத்தில் வாசக சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திறப்புவிழாவுக்கு, சுடலைமணி தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியத் தலைவா் குணம், ஊா் பெரியவா் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆலடி அருணா கல்விக் குழுமத்தின் செயலா் எழில்வாணன் வாசக சாலையை திறந்து வைத்தாா். எழுத்தாளா் தமிழன் பிராபாகா், ஆசிரியா் மாரிமுத்து, ராணுவ வீரா் சதீஸ், ஊராட்சி செயலா் நடராஜன், நூலகா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தங்கராஜ் வரவேற்றாா். அழகுதுரை நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...