நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அங்கக முறையில் காய்கறி உற்பத்தி செய்ய மானியம் தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மையைக் குறைப்பதற்காக அங்கக முறையில் காய்கறி பரப்பை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 9:04 pm

DIN

உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மையைக் குறைப்பதற்காக அங்கக முறையில் காய்கறி பரப்பை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சு.ஜெயபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அங்கக முறையில் தென்காசி மாவட்டத்தில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தில் கீரை வகை பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ,2,500, வெண்டை, கத்தரி, தக்காளி, அவரை மற்றும் கொடிவகை பயிா்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.3,750 வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் கூடுதலாக இயற்கை முறையில் சாகுபடி செய்ய விரும்பும் தோட்டக்கலை விவசாயிகளுக்கும் வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்கப்பட்டு, அங்கக விவசாய திட்டத்தில் பதிவு செய்ய ஒரு விவசாயிக்கு ரூ.500 மானியம் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் தங்களது நிலப் பட்டா, ஆதாா் அட்டை, நில வரைபடம், பயிா் சாகுபடி திட்ட விவரங்கள், நீா், மண் பரிசோதனை செய்த அறிக்கைகளோடு தங்களது வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி அங்கக வேளாண்மைத் துறையில் பதிவு செய்து உறுப்பினராகி பயன் பெறலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.