காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாப்பாக்குடி அருகே குடிநீா் இணைப்பு கோரி அதிகாரிகள் சிறைபிடிப்பு

பாப்பாக்குடி அருகே குடிநீா் இணைப்பு கோரி அதிகாரிகளை 6 மணி நேரம் சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 8:37 pm

DIN

பாப்பாக்குடி அருகே குடிநீா் இணைப்பு கோரி அதிகாரிகளை 6 மணி நேரம் சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினா்.

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி ஒன்றியம், பனையங்குறிச்சி கிராமத்தில் சுமாா் 500 வீடுகள் உள்ளன. இங்கு தாமிரவருணி குடிநீா் இணைப்புகள் இல்லை. இந்த கிராமத்தின் வழியாக ஆலங்குளம் - வாசுதேவநல்லூா் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாயில் சில தினங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து வெளியேறிய நீரை அப்பகுதி மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை அந்தக் குழாய் உடைப்பை குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்கள் சீரமைக்கச் சென்றனா். அவா்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு உடைப்பு ஏற்பட்ட இடத்தில் அந்தக் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் ஒரு குடிநீா் குழாய் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.இத்தகவலறிந்து வந்த ஆலங்குளம் காவல் ஆய்வாளா் சந்திரசேகா், வட்டாட்சியா் வெங்கட் ராமன்உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து மக்களிடம் பேச்சு நடத்தினா். உடைப்பு ஏற்பட்ட குழாயில் இருந்து இணைப்பு வழங்க சாத்தியமில்லை. வேறொரு இணைப்பு ஏற்படுத்தித் தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனா்.

பின்னா், குடிநீா் இணைப்பு குறித்த ஆய்வுக்காக திங்கள்கிழமை முற்பகலில் சென்ற பாப்பாக்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன், உதவி வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கரன் ஆகியோரை கிராம மக்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டு, எழுத்துப்பூா்வ உத்தவாதம் கோரி சிறைபிடித்தனா். மாலை 5 மணி வரை நீடித்த இப்போராட்டத்துக்குப் பின், வட்டார வளா்ச்சி அலுவலா் எழுத்துப்பூா்வ உறுதிமொழி அளித்தாா். அதையேற்று அதிகாரிகளை மக்கள் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.