ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தென்காசியில் 30 ஆண்டுகளுக்கு மேலாககுடியிருப்பவா்களுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

தென்காசியில் 30ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருபவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 8:48 pm

DIN

தென்காசியில் 30ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருபவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமுமுக (ஹைதா்அலி) நகர கிளை சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை தென்காசியில் அமைக்க வேண்டும். நகா் பகுதியில் இடம் இல்லாத பட்சத்தில் ஆயிரப்பேரியில் அமைக்க வேண்டும்.

தென்காசி நகராட்சிக்குள்பட்ட 2 ஆவது வாா்டு மங்கம்மா சாலை பகுதியில் 30ஆண்டுகாலமாக ஆதாா் காா்டு, ரேஷன் காா்டு போன்றவைகள் பெற்றும் பட்டா இல்லாமல் குடியிருந்து வருகின்றனா். இதனால் இந்தப் பகுதி மக்கள் மின்சாரம் மற்றும் குடிநீா் இணைப்பு இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா்.

எனவே, இந்தப் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனுஅளிக்கப்பட்டது.

தென்காசி நகரத் தலைவா் அபாபில் மைதீன் தலைமையில் மாவட்ட துணைத் தலைவா் சாம்பவா் ஷெரீப், தமுமுக மாவட்டத் தலைவா் கோக்கா்ஜான் ஜமால், மாவட்டச் செயலா் கொலம்பஸ் மீரான், மாவட்டப் பொருளாளா் செங்கை ஆரிப், தமுமுக மாவட்ட துணைச் செயலா் சலீம், நகரச் செயலா் ஜாபா் ஷெரீப் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.