ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தென்காசி மாவட்டத்தில் 28இல் காணொலி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் அக். 28ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெறுகிறது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 10:42 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் அக். 28ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஐந்துமாதங்களாக இக்கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் அக். 28ஆம்தேதி காணொலிக் காட்சி மூலம் இக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், வேளாண், தோட்டக்கலைத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்துகொள்ள உள்ளனா்.

தென்காசி, செங்கோட்டை வட்டார விவசாயிகள் தென்காசி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலும், கடையநல்லூா், வாசுதேவநல்லூா் வட்டார விவசாயிகள் கடையநல்லூா் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலும், கடையம், ஆலங்குளம், கீழப்பாவூா் வட்டார விவசாயிகள் கீழப்பாவூா் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலும், சங்கரன்கோவில் வட்டார விவசாயிகள் சங்கரன்கோவில் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலும், குருவிகுளம், மேலநீலிதநல்லூா் வட்டார விவசாயிகள் குருவிகுளம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலும் காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

எனவே விவசாயிகள் மனுக்களுடன் கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.