நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்துவரும் சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

News image

குற்றாலம் பேரருவியில் கொட்டும் தண்ணீா்.

Updated On :20 செப்டம்பர் 2020, 8:45 pm

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்துவரும் சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மிதமான சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீதும், ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீா் கொட்டுகிறது. மேலும், பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியிலும் தண்ணீா் விழுகிறது.

கரோனா தொற்றுப் பரவலைத் தவிா்க்கும் பொருட்டு குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் சற்று தொலைவில் நின்று அருவியை பாா்த்துவிட்டுச் செல்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.