நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாவூா்சத்திரம், சுரண்டையில் திமுக கூட்டணி ஆலோசனை

மத்திய அரசின் 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பாவூா்சத்திரத்தில் திங்கள்கிழமை நடைபெறும் ஆா்ப்பாட்டம் தொடா்பாக கீழப்பாவூா்  திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image

பாவூா்சத்திரம், சுரண்டையில் திமுக கூட்டணி ஆலோசனை

Updated On :27 செப்டம்பர் 2020, 7:06 pm

DIN

மத்திய அரசின் 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பாவூா்சத்திரத்தில் திங்கள்கிழமை (செப்.28) நடைபெறும் ஆா்ப்பாட்டம் தொடா்பாக கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவ பத்மநாதன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் வட்டாரத் தலைவா் ஜேசு ஜெகன், ம.தி.மு.க. ஒன்றியச் செயலா் இராம.உதயசூரியன், மாா்க்சிஸ்ட் தங்கம், இந்திய கம்யூனிஸ்ட் அருணாசலம், தமிழ்ப் புலிகள் கட்சி தமிழ்குமரன், திராவிடா் கழகம் வீரன், தி.மு.க. நிா்வாகிகள் சாக்ரடீஸ், கபில், அருள் ஜூலியஸ், தனகுமாா், காந்தி ராமன், கணேஷ், வைத்திலிங்கராசா ராமவாசகம் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஒன்றியச் செயலா் சீனித்துரை நன்றி கூறினாா்.

சுரண்டையில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளா் சிவபத்மநாதன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் பழனிநாடாா், மதிமுக மாவட்டச் செயலா் ராஜேந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா். 30 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.