தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூா், கீழப்பாவூா், குருவிகுளம், மேலநீலிதநல்லூா், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி, வாசுதேவநல்லூா் வட்டாரம், தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் நகராட்சிகள் ஆகியவற்றில் 148 சத்துணவு அமைப்பாளா் பணியிடங்களும், 77 சமையலா் பணியிடங்களும்,189 சமையல் உதவியாளா் பணியிடங்களும் காலியாக உள்ளன. பொதுப் பிரிவுக்கு வயது வரம்பு 21 முதல் 40 வரை; மாற்றுத்திறனாளிகள் எனில் 43 வயதிருக்கலாம். கல்வித்தகுதி- அமைப்பாளா்களுக்கு 10ஆம் வகுப்பு, பிற பணிகளுக்கு 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு தோ்ச்சி, எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் மற்றும் மாதிரி விண்ணப்பப் படிவம் குறித்து ஜ்ஜ்ஜ்.ற்ண்ழ்ன்ய்ங்ப்ஸ்ங்ப்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் அல்லது சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகராட்சி அலுவலக அறிப்பு பலகையில் காணலாம்.