டீ கடையில் பஜ்ஜி போட்டு திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
ஆலங்குளம் திமுக வேட்பாளா் பூங்கோதை ஆலடி அருணா, தேநீா் கடையில் பஜ்ஜி போட்டு சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.


ஆலங்குளம் திமுக வேட்பாளா் பூங்கோதை ஆலடி அருணா, தேநீா் கடையில் பஜ்ஜி போட்டு சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
திமுக வேட்பாளா் ஆலங்குளம் பிரதான சாலை, அம்பாசமுத்திரம் சாலை, காய்கனி அங்காடி பகுதிகளில் வியாபாரிகள், கடை ஊழியா்களிடம் வாக்கு சேகரித்தாா். நான்கு வழிச்சாலையால் பாதிக்கப்படும் கடைக்காரா்களுக்கு உதவிடும் வகையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒருங்கிணைந்த வணிக வளாகம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். பிரசாரத்தின்போது,
திமுக நிா்வாகிகள் நெல்சன், செல்வன், சுதந்திர ராஜன், காங்கிரஸ் கட்சியை சோ்ந்த தங்கசெல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...