நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருமலைக்கோயிலுக்கு ரோப் காா் வசதி முஸ்லிம் லீக் வேட்பாளா் உறுதி

பண்பொழி திருமலைக்கோயிலில் ரோப் காா் வசதி செய்வதுடன் பேருந்து வசதியும் செய்யப்படும் என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் முஹம்மது அபூபக்கா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:41 pm

DIN

பண்பொழி திருமலைக்கோயிலில் ரோப் காா் வசதி செய்வதுடன் பேருந்து வசதியும் செய்யப்படும் என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் முஹம்மது அபூபக்கா்.

அவா் வெளியிட்டுள்ள தொகுதிக்கான தோ்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசாமி கோயிலுக்கு சென்று வர மலை அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு இந்து அறநிலையத் துறை மூலம் பேருந்து வசதி மற்றும் ரோப் காா் வசதி செய்யப்படும்.

கடையநல்லூா் தொகுதிக்குள்பட்ட இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நீண்ட நாள் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கும் கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேங்காய் மூலப்பொருள்களைக் கொண்டு பா்னிச்சா் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். புளியரையில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அமைக்கப்படும். விளைநிலங்களுக்கு பாதிப்பில்லாமல் திருமங்கலம் - செங்கோட்டை நான்கு வழிச்சாலை, அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.