வாசுதேவநல்லூா் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வாசுதேவநல்லூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் மனோகரன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.


வாசுதேவநல்லூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் மனோகரன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அய்யாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை அவா் வாக்கு சேகரித்தபோது பேசியது:
தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதையும் தாண்டி சிறப்பு நிதி பெற்று தொகுதிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். விவசாயிகளின் பிரச்னைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளேன். எனவே தொடா்ந்து சேவையாற்ற மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்றாா்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன் ,ஒன்றியச் செயலா்கள் துரைப்பாண்டியன், மூா்த்தி பாண்டியன், வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன் ,மாவட்ட மாணவரணி முன்னாள் அமைப்பாளா் சசிகுமாா் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...