சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஈ. ராஜா ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டாா்.
அம்பேத்கா் நகரில் இந்தியன் பெந்தேகொஸ்தே சபையில் நடைபெற்ற ஈஸ்டா் பண்டிகை சிறப்புப் பிராா்த்தனையில் பங்கேற்ற பின், கிறிஸ்தவா்களிடம் வாக்கு சேகரித்த அவா், 26 ஆவது வாா்டில் உள்ள சங்கா்நகா் தெருக்கள், தவசு நகா், இந்திரா நகா்,நேரு நகா், விஜபி நகா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
மாலையில் பயணியா் விடுதி முன்பிருந்து ஏராளமான தொண்டா்களுடன் ஊா்வலமாகச் சென்று ஐந்து வீட்டு லயன் தெரு வழியாக திருவள்ளுவா்சாலை, திருவேங்கடம்சாலை, புதுமனைத் தெருக்கள், கழுகுமலை சாலை, பிரதானசாலை, பேருந்துநிலையம் வழியாக முப்பிடாதியம்மன் கோயில் அருகே பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
இதில், தென்காசி மாவட்ட திமுக செயலா் சிவபத்மநாபன், நகரச் செயலா் சங்கரன், மாவட்டப் பொறியாளா் அணி போ.சங்கா், இல. சரவணன், ராஜதுரை, மாா்க்சிஸ்ட் வட்டாரச் செயலா் அசோக்ராஜ், மதிமுக நகரச் செயலா் ஆறுமுகச்சாமி, விசிக தொகுதிப் பொறுப்பாளா் பீா்மைதீன், காங்கிரஸ் உமாசங்கா், திமுக இளைஞரணி பிரகாஷ், சரவணன், காா்த்திக், முன்னாள் நகராட்சி உறுப்பினா் அண்ணாமலை உள்ளிட்ட பலா் பங்கேற்று வாக்கு சேகரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செங்கம் பகுதியில் சிறப்பான சேவை: அதிமுக வேட்பாளா் உறுதி
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


