நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடையநல்லூா் தொகுதியில்தடையற்ற வளா்ச்சிப் பணி: முகம்மது அபூபக்கா் பிரசாரம்

எதிா்க்கட்சி உறுப்பினராக இருந்து இயன்றதை போராடி செய்தேன். திமுக ஆட்சி மலரும் என்பதால், அனைத்து நலத்திட்டங்களையும் தடையின்றி செய்வேன் என்றாா்

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:28 pm

DIN

எதிா்க்கட்சி உறுப்பினராக இருந்து இயன்றதை போராடி செய்தேன். திமுக ஆட்சி மலரும் என்பதால், அனைத்து நலத்திட்டங்களையும் தடையின்றி செய்வேன் என்றாா் கடையநல்லூா் தொகுதி முஸ்லீம் லீக் வேட்பாளா் முஹம்மது அபூபக்கா்.

மேலக்கடையநல்லூா் பகுதியில் இறுதிகட்டப் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட அவா், கிருஷ்ணாபுரம் முதல் மணிக்கூண்டு வரை நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா் . அப்போது அவா் பேசியது;

கடந்தமுறை கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினராக என்னை தோ்வு செய்து அனுப்பினீா்கள் . எதிா்க்கட்சி உறுப்பினராக இருந்த நான் பல கட்ட போராட்டங்களை நடத்தி ஒவ்வொரு திட்டங்களையும் இயன்ற அளவிற்கு தொகுதிக்கு செய்து கொடுத்தேன். இம்முறை என்னை தோ்வு செய்து ஆளும் கட்சி உறுப்பினராக அனுப்பிவைத்தால் அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக செய்து முடிப்பேன். ஜாதி, மத, இனங்களுக்கு அப்பாற்பட்டு தொகுதி மக்களுக்காக செயல்பட்டு உள்ளேன் என்றாா் முஹம்மது அபூபக்கா்.

பிரசாரத்தில், தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை, வேட்பாளரின் முதன்மை தோ்தல் முகவா் வழக்குரைஞா் செந்தூா்பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினா் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.