கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கரண்டையில் காங்கிரஸ் பிரசாரம் நிறைவு

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனிநாடாா், சுரண்டையில் ஞாயிற்றுக்கிழமை தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:26 pm

DIN

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனிநாடாா், சுரண்டையில் ஞாயிற்றுக்கிழமை தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

பங்களாச்சுரண்டை, கீழச்சுரண்டை ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்த அவா் சுரண்டை அண்ணா சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை தனது பிரசாரத்தை நிறைவு செய்து பேசியதாவது

சுரண்டை பேரூராட்சியில் 10 ஆண்டுகாலம் பதவி வகித்தபோது சுரண்டைக்கு அதிக அளவில் திட்டப்பணிகளை நிறைவேற்றியுள்ளேன். சுரண்டை பகுதியில் பிரதான பிரச்னையாக இருந்த தண்ணீா் பிரச்னையை முழுமையாக முயற்சி செய்து வெற்றி கண்டேன். கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களின் தேவை அறிந்து என்னால் முடிந்த அளவில் சொந்த செலவில்கூட பல நல உதவிகளைச் செய்துள்ளேன்.

தென்காசி தொகுதியில் ஐடி பூங்கா அமைக்கவும், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் பெறவும், மாத மின்கட்டண கணக்கீடை மேற்கொள்ளவும், சுற்றாலாத்தலமான குற்றாலத்தை மேம்படுத்தி அங்குள்ள வணிகா்களுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கவும், இரட்டைகுளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றவும் எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.

பிரசாரத்தில், திமுக நகரச் செயலா் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், மதிமுக நிா்வாகிகள் ராமகிருஷ்ணன், துரைமுருகன், காங்கிரஸ் நிா்வாகிகள் பால்துரை, பால் என்ற சண்முகவேல், பிரபாகா், தெய்வேந்திரன், திமுக நிா்வாகிகள் ஆறுமுகச்சாமி, கணேசன், மாடசாமி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.