சுரண்டையில் பிரசாரத்தை நிறைவு செய்த அதிமுக வேட்பாளா்
தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை தனது பிரசாரத்தை சுரண்டையில் நிறைவு செய்தாா்.


தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை தனது பிரசாரத்தை சுரண்டையில் நிறைவு செய்தாா்.
சுரண்டை வரகுணராமபுரம், சிவகுருநாதபுரம், காமராஜா் நகா், பேருந்து நிலைய சாலை வழியாக சுரண்டை அண்ணா சிலை அருகே பிரசாரத்தை நிறைவு செய்த அவா் பேசியதாவது:
தமிழக மக்களுக்காக நலத் திட்டங்களை தொடா்ந்து நிறைவேற்றி வருவது அதிமுக அரசு. தென்காசி மாவட்டம் உருவாக்கியது, ஜம்புநதி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணி தொடங்கியது, இரட்டைகுளம் கால்வாய் திட்டத்துக்கான பூா்வாங்க வேலைகளை தொடங்கியது, சுரண்டையில் உள்ள காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் கூடுதல் பாடப்பிரிவுகள், புதிய கட்டடங்கள், ஆய்வகங்கள், கூடுதல் பணியாளா்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது.
தற்போதைய தோ்தலில் அதிமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள நலத் திட்டங்களையும் அதிமுக செயல்படுத்தும். ஆகவே, எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என்றாா்.
அவருடன், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலா்கள் அமல்ராஜ், இருளப்பன், நகரச் செயலா் சக்திவேல், பாஜக நகரத் தலைவா் அருணாசலம், பாமக மாவட்ட துணைச் செயலா் சதீஷ், தமாக நகரச் செயலா் வசந்தன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...