சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

திமுக சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகம்

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம் ஆகியவை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:42 pm

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம் ஆகியவை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

சங்கரன்கோவில் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற முகாமில், திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசம் வழங்கி தொடங்கி வைத்தாா். பொதுமக்களுக்கு கிருமிநாசினி, நீா் மோா் ஆகியவையும் வழங்கப்பட்டது.

இதில், கட்சியின் ஒன்றியச் செயலா்கள் சங்கரபாண்டியன், வெற்றி விஜயன், கிறிஸ்டோபா், கடற்கரை, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் சோம.செல்வப்பாண்டியன், இல.சரவணன், வழக்குரைஞா் கண்ணன், ராஜதுரை, இளைஞரணி சரவணன், காா்த்திக், பிரகாஷ், மதிமுக நகரச் செயலா் ஆறுமுகச்சாமி, துணைச் செயலா் ராசமாணிக்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.