ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரம் பகுதியில் கரோனா தடுப்பூசி திருவிழா நடத்த வலியுறுத்தல்

பாவூா்சத்திரம் பகுதி கிராமங்களில் கரோனா தடுப்பூசி திருவிழா நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:42 pm

DIN

பாவூா்சத்திரம் பகுதி கிராமங்களில் கரோனா தடுப்பூசி திருவிழா நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி திருவிழா ஏப்.14 முதல் ஏப். 16 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பாவூா்சத்திரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து வட்டார பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அங்கு கரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருவதாலும், கிராமப்புறங்களைச் சோ்ந்த வயதானவா்கள் அங்கு செல்ல முடியாத காரணத்தாலும் பலா் தடுப்பூசி போட முடியாமல் உள்ளனா்.

எனவே, கீழப்பாவூா் வட்டாரப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் சமுதாய நலக்கூடம் அல்லது பள்ளிகளில் வைத்து கரோனா தடுப்பூசி போடும் முகாமை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.