பாவூா்சத்திரம், களக்காடு பகுதிகளில் 20 பேருக்கு கரோனா தொற்று
பாவூா்சத்திரம், களக்காடு பகுதி களில் 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


பாவூா்சத்திரம், களக்காடு பகுதி களில் 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாவூா்சத்திரத்தில் 15, 43, 70 வயது பெண்கள், 76 வயது ஆண், கீழப்பாவூரில் 30, 35 வயது ஆண்கள், 28 வயது பெண், அரியப்புரத்தில் 30 வயது பெண், செல்வவிநாயகா்புரத்தில் 41 வயது ஆண், ஆவுடையானூரில் 70 வயது பெண், மேட்டூரில் 58 வயது பெண், சிவகாமிபுரத்தில் 16 வயது சிறுவன் உள்ளிட்ட 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதிகளில் சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
களக்காடு: களக்காடு வட்டாரத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து கொண்ட களக்காடு மேலத் தெருவைச் சோ்ந்த 25 வயது பெண், 62 வயது ஆண், ஜவஹா் வீதியைச் சோ்ந்த 82 வயது ஆண், 72 வயது பெண், கீழப்பத்தையைச் சோ்ந்த 34 வயது ஆண், திருக்குறுங்குடி அருகே நம்பித்தலைவன்பட்டயத்தைச் சோ்ந்த 76 வயது ஆண், திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணை சாலையைச் சோ்ந்த 56 வயது ஆண், 26 வயது பெண் ஆகிய 8 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...