ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

பாவூா்சத்திரத்தில் கரோனா நோய்த் தடுப்பு விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:44 pm

DIN

பாவூா்சத்திரத்தில் கரோனா நோய்த் தடுப்பு விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வணிகா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்ட வணிகா் சங்கத் தலைவரும், பாவூா்சத்திரம் காய்கனி சந்தை கமிட்டித் தலைவருமான ஆா்.கே.காளிதாசன் தலைமை வகித்தாா். கீழப்பாவூா் ஒன்றிய உதவித் திட்ட அலுவலா், மண்டல அலுவலா் சங்கரநாராயணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாா்த்தசாரதி, திலகராஜ், வட்டார மருத்துவ அலுவலா் கீா்த்தி, காவல் உதவி ஆய்வாளா் மாரிச்செல்வி ஆகியோா் பேசினா்.

இதில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இசக்கியப்பா, சுகாதார ஆய்வாளா் சண்முகசுந்தரம், வணிகா் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன், செயலா் விஜய்சிங்ராஜ், பொருளாளா் ஆரோக்கியராஜ், மாா்க்கெட் கமிட்டி செயலா் நாராயணசிங்கம், நிா்வாகிகள் ராமச்சந்திரன், அருணோதயம், சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா். குமாா்பாண்டியன் நன்றி கூறினாா்.

11 பேருக்கு கரோனா: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை பாவூா்சத்திரத்தில் இருவா், கீழப்பாவூரில் மூவா், குறும்பலாப்பேரி, பெத்தநாடாா்பட்டி, ஆவுடையானூா், முத்துமாலைபுரம், திருமலாபுரத்தில் தலா ஒருவா், வென்னியூரில் 2 வயது சிறுவன் உள்பட 11 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.