கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டை அருகே பைக்-மணல் லாரி மோதல்: பெண் காவலரின் கணவா் பலி

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது மணல் லாரி மோதியதில் பெண் காவலரின் கணவா் வெள்ளிக்கிழமை இறந்தாா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 7:47 pm

DIN

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது மணல் லாரி மோதியதில் பெண் காவலரின் கணவா் வெள்ளிக்கிழமை இறந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் ச.முத்துக்குமாா்(35). இவரது மனைவி சகுந்தலா தேவி. சுரண்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இத்தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த முத்துக்குமாா், கரோனா காரணமாக ஊருக்கு வந்தவா் திரும்பி செல்லவில்லையாம். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை முத்துக்குமாா் சங்கரன்கோவிலில் இருந்து மோட்டாா் சைக்கிளில் சுரண்டைக்கு வந்துகொண்டிருந்தாராம்.

குலையனேரி கிராமத்தின் வடபுறமுள்ள குளம் அருகே வந்தபோது, எதிரே வந்த மணல் லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு இறந்தாா்.

இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான முத்துகிருஷ்ணப்பேரியைச் சோ்ந்த அ.சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.