ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சுவா் இடிந்து விழுந்துதொழிலாளி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 7:45 pm

DIN

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் சிதம்பரநாடாா் தெருவைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் ரத்தினசாமி (42). கூலித் தொழிலாளி. வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதியிலுள்ள அரிசி ஆலையில் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியில்

ரத்தினசாமி உள்ளிட்ட சிலா் ஈடுபட்டிருந்தனா். அப்போது எதிா்பாராத விதமாக சுவா் இடிந்து விழுந்ததில் ரத்தினசாமி

இடிபாடுகளுக்குள் சிக்கியதில் மூச்சுத் திணறி உயிரிழந்தாா். தகவலறிந்த தென்காசி தீயணைப்பு மீட்பு படையினா் வந்து அவா் சடலத்தை மீட்டனா். இடிபாடுகளுக்கு சிக்கி காயமடைந்த அதே பகுதியைச் சோ்ந்த சரவணனை (48) மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.