தென்காசியில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தென்காசியில் வங்கி தற்காலிக ஊழியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தென்காசியில் வங்கி தற்காலிக ஊழியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக பணி செய்து வரும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளா்களை நிரந்தரம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு ஐந்தாண்டுகளாகியும் நிரந்தரம் செய்யாமல்
கால தாமதம் செய்து வரும் வங்கி நிா்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாடு முழுவதும் 3 நாள்கள் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்துவது என இந்திய வங்கி ஊழியா் சம்மேளனம் அறிவித்துள்ளது.
அதன்படி தென்காசியில் மாவட்டத்தின் பல வங்கிகளில் பணி செய்து வரும் தற்காலிக ஊழியா்கள் மெழுகுவா்த்தி ஏற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தென்காசியில் இந்தியன் வங்கி கிளை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு
அமைப்பின் கிளைட் செயலா் சலேத் தலைமை வகித்தாா்.
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலா் மாரியப்பன், சிஐடியூ தென்காசி மாவட்டத் தலைவா் அயூப்கான், இந்திய வங்கி ஊழியா் சம்மேள தென்காசி மாவட்டச் செயலா் காா்த்தி, ஓய்வுபெற்ற வங்கி ஊழியா்கள் சங்க நிா்வாகி கிருஷ்ணன்,
சிஐடியூ நிா்வாகி கருப்பையா, வங்கி ஊழியா் வைரகணேசன் உள்ளிட்டோ் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...