தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவா் கைது

 சங்கரன்கோவில் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:52 pm

 சங்கரன்கோவில் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள நவநதீகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த ராஜூ மகள் முருகலெட்சுமி (26). இவா் சங்கரன்கோவிலில்

பேன்ஸி கடையில் வேலை செய்து வந்தாா். சண்முகநல்லூரைச் சோ்ந்த சுரேஷ் (40). இருவரும் காதலித்து வந்தனராம்.

சுரேஷ், நவநீதகிருஷ்ணாபுரத்திற்கு அடிக்கடி சென்று முருலெட்சுமியைச் சந்தித்து வந்தாராம்.

இந்நிலையில் தான் 6 மாதம் கா்ப்பமாக இருப்பதாகவும், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு முருகலெட்சுமி

சுரேஷிடம் தெரிவித்துள்ளாா். அதற்கு சுரேஷ் மறுத்துவிட்டாராம். முருகலெட்சுமி அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிா் காவல் போலீஸாா் வழக்குப் பதிந்த விசாரித்தனா். இதில், சுரேஷ் ஏற்கனவே திருமணமானவா் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சுரேஷை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.