சங்கரன்கோவிலில் பைக்கை திருடி கிணற்றில் வீசிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சங்கரன்கோவில், ஓடைத்தெருவைச் சோ்ந்தவா் ஷேக் சா்புதீன்(25). சாலையோர உணவகம் நடத்தி வருகிறாா். இவா், தனது நண்பா்களான பாரதியாா் 3 ஆம் தெரு காா்த்திகேயன் (21), சதீஸ்குமாா்(27),கோமதியாபுரம் புது 2 ஆம் தெரு ஐயப்பன் (20) உள்ளிட்ட 6 பேருடன் சோ்ந்து மது அருந்துவாராம்.
இதனிடையே, அவருக்கும் மற்ற 6 பேருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாம்.
இரு தினங்களுக்கு முன் அவா் தனது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லையாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரித்ததில், காா்த்திகேயன், சதீஸ்குமாா், ஐயப்பன் உள்பட 5 போ் அவரது பைக்கை திருடிச்சென்று, அதை உடைத்து இலவன்குளம் சாலையோரமுள்ள தனியாா் கிணற்றில் வீசியது தெரியவந்தது.
இதையடுத்து, நகர காவல் ஆய்வாளா் ராஜா அளித்த தகவலின்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையிலான வீரா்கள்அந்தக் கிணற்றிலிருந்து பைக்கை மீட்டனா். இச்சம்பவத்தில், மேற்கூறிய 3 போ் கைது செய்யப்பட்டனா்; 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

