தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சங்கரன்கோவிலில் கோயில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

சங்கரன்கோவில்-திருநெல்வேலி சாலையில் உள்ள கரும்புளி சாஸ்தா கோயிலில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:33 pm

சங்கரன்கோவில்-திருநெல்வேலி சாலையில் உள்ள கரும்புளி சாஸ்தா கோயிலில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இக்கோயிலில் வியாழக்கிழமை இரவு புகுந்த மா்மநபா்கள் பூட்டை உடைத்து 12 கிராம் தங்கத் தாலிகள், 400 கிராம் வெள்ளி கொடி மற்றும் பொருள்கள், ரொக்கம் ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா்.

இச்சம்பவம் தொடா்பாக கோயில் தா்மகா்த்தா சங்கா் அளித்த புகாரின் பேரில் சின்னக்கோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும், திருநெல்வேலியில் இருந்து வந்த விரல்ரேகை நிபுணா்கள் அங்கிருந்த தடயங்களை பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.