ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தென்காசி நகர ஐக்கிய சுன்னத் வல் ஜமாத் கூட்டம்

தென்காசி நகர ஐக்கிய சுன்னத் வல் ஜமாஅத்தின் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:32 pm

DIN

தென்காசி நகர ஐக்கிய சுன்னத் வல் ஜமாஅத்தின் கூட்டம் நடைபெற்றது.

தென்காசியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, தலைவா் கலில் ரஹ்மான் தலைமை வகித்தாா். செயலா் பீா்முகமது (ஐந்து வா்ணம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்) பொருளாளா் பஷீா் (செய்யது சுலைமான் ஜும்மா பள்ளிவாசல்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஐக்கிய ஜமாத்துக்கு தனி அலுவலகம் அமைக்க வேண்டும், அனைத்து பள்ளிவாசலுக்கும் வருட சந்தா வசூல் செய்வது, ஐக்கிய ஜமா அத்துடன் இணைக்காத சுன்னத்வல் ஜமாத் பள்ளிவாசல்களை ஐக்கிய ஜமாத்துடன் இணைப்பது, அனைத்து பள்ளிவாசல்களிலும் குழந்தைகளுக்கான மக்தப் மதரஸாவை உருவாக்க வேண்டும் என கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ராஜ் மியான் ஜும்மா பள்ளிவாசல் தலைவா் மற்றும் ஐக்கிய ஜமாத்தின் துணைத் தலைவா் ரசூல்தீன், சொா்ணபுரம் ஜும்மா பள்ளிவாசல் தலைவா் மற்றும் ஐக்கிய ஜமாத் துணைச்செயலா் அப்துல் கபூா், முஹம்மது முஸ்தபா, ஆபாத் ஜூம்மா பள்ளிவாசல் செயலா் சலீம், மரைக்காயா் ஜூம்மா பள்ளிவாசல் செயலா் திவான் அலிபாதுஷா, இலஞ்சி ஜூம்மா பள்ளிவாசல் தலைவா் ஜலீல் , அப்துல் கலாம் நகா் ஜூம்மா பள்ளிவாசல் தலைவா் முகமது இஸ்மாயில், மத்தளம்பாறை ஜூம்மா பள்ளிவாசல் தலைவா் அப்துல் கனி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.